Saturday, May 5, 2012

அறிமுகம்



நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! இந்த வாசகத்தை எவராலும் மறக்க இயலுமோ? நக்கீரர்  உதிர்த்த வாசகங்கள். எதிரே நிற்பவன் இறைவனேயானாலும் தவறு,  தவறுதான் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிய தமிழ்ப்புலவர். பாண்டிய மன்னனின் அரசவைப் புலவர். சங்கறுக்கும் எங்கள் குலம், சங்கரனாருக்கு ஏது குலம் என்று இறைவனை வஞ்ச புகழ்ச்சி அணியால் பாடிய சொல்வேந்தர். அவர்தம் இனம் என்று சொல்லிக்கொள்ளும் ஓர் இனம் தான் மீனவர் இனம். நீண்ட நாட்களாக மீனவ இனத்தின் வளர்ச்சிக்காக என்னால் இயன்றமட்டும் பாடுபடவேண்டும் என்ற எண்ணம் அவ்வப்போது எட்டிப்பார்க்கும். குடும்பச்  சூழல் காரணமாக ஆசைகள் அடங்கிப்போகும். இன்று எனது எண்ணத்தின் ஆசையை வெளிக்கொணரும் விதமாக இந்த வலை இதழை (blog) தொடங்குகின்றேன். 

இந்த வலை இதழ் வாயிலாக மீனவ சமுதாயத்தின் வளர்ச்சிக்கான யோசனைகளை, மீனவ மாணவ/மாணவியரின் எதிர்காலம் குறித்த ஆலோசனைகள், இன்றைய மீனவ சமுதாயம், நாட்டின் வளர்ச்சியில் மீனவ மக்களின் பங்கு, அரசியலில் மீனவ மக்களின் பங்கு, மீனவ மக்களின் வாழ்வியல் சூழ்நிலைகள், திருத்திக்கொள்ள வேண்டிய விஷயங்கள் எவை, உரிமைகள் எவை ஆகியனவற்றை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 

வாழ்க தமிழினம்! வளர்க மீனவம்!


Competitive Examinations


TNPSC

Tamilnadu Government declares Group III & IV for recruiting personals for various posts. The board has designed new website through which any one can apply online. One Time Registration also available. Using this facility, One can register his / her profile with TNPSC by paying Rs.50 through Indian Bank, Post Office and Internet Banking, Debit Cards and Credit cards. After registering, automated sms and e-mail to be sent by TNPSC in which can find the user name and password for accessing TNPSC Online to apply further for 5 years. Therefore, we need not input our personal profile every time while applying.

Below the links are given to visit directly to TNPSC Online.






Tuesday, December 27, 2011

கடல் பாதுகாப்பு கருவி (EPIRB)




           மிகச் சமீபத்தில் இக்கருவி பற்றி சென்னையில் திரைப்பட உதவி இயக்குனராகப் பணியாற்றும் ஒரு நண்பர் கூறியதன் விளைவாக, நான் இந்த வீடியோ பதிவை தேட நேர்ந்தது. இது நமது மீனவ சகோதரர்களுக்கு அவசியம் பயன்படும் என்கிற நோக்கத்தில் வெளியிட்டுள்ளேன். 

                           மேலை நாடுகளில் உள்ள மீனவர்கள் அறிவியல் சார்ந்த சாதனங்களைக்   கொண்டு மீன் பிடித்தும், கடல் சீற்றம், புயல் ஆகிய காலங்களில் தப்பித்தும் வாழ்கின்றனர். ஏனோ, தமிழன் என்கிற ஒரே காரணத்தால் மீனவ இனம் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது. இது இன்று நேற்றல்ல, வெள்ளையர்கள் என்று சென்னையைப பிடித்தனரோ அன்றே இது ஆரம்பம் என்பது ஜே.பாலன் எழுதியுள்ள புத்தகம் மூலம் நாம் அறியலாம். 


Saturday, October 8, 2011

நிலை மாறுமா?

கடந்த சில வாரங்களுக்கும் முன்னால், நாகப்பட்டிணம் மாவட்டம், வெள்ளப்பள்ளம் எனும் கிராமத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச்   சென்று இன்னமும் கரை சேரவில்லை என்கிற செய்தி கேட்டு அதிர்ச்சியடைகின்றேன். அதைவிட கொடுமை, மற்ற மீனவ கிராம மக்களிடம் விசாரிக்கும் போது, இதைப் பற்றி அவர்கள் ஒரு பொருட்டாய் நினைப்பதாகத் தெரியவில்லை. ஏன் இந்த கேவலமான அவலம்? உயிர் என்பது, அதிலும் மீனவன் உயிர் என்பது அவ்வளவு கேவலமா? இந்த 3 பேர்களின் குடும்பத்தினரின் எதிர்காலம் என்னவாகும்? இந்த 3 பேர்களுள் ஒருவரின் மகளுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த பெண்ணின் எதிர்காலம் என்னவாகும்? இதற்காக கவலைப்படுவோர் எத்தனை பேர்? 

இதே நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒருவர் தான் தமிழக  அரசில் மீன்வளத்துறை அமைச்சராக இருக்கிறார். அவர் செய்த முயற்சிதான் என்ன? அல்லது, இரவுபகலாக கடற்பரப்பை காவல் செய்வதாக காட்டிக்கொள்ளும் கப்பற்படை செய்த முயற்சிகள் என்ன? 

ஆனால், ஒன்று மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். மீனவன் ஒன்றுபடாத வரையில் இம்மாதிரி சம்பவங்கள் இனி ஏராளமாய் நடக்கும். நமக்குத் தான் நியாயம் கேட்க ஆளில்லையே. அதோடில்லாமல், நம்மவர்களுக்குத்தான் எத்துணை முக்கியமான வேலைகள்? அரசியல் கட்சிகளுக்கு கொடிகள் பிடிப்பது, மறைந்த தலைவர் என்றாலும் மறக்காமல் ஓட்டுகள் போடுவது, பக்கத்து ஊர்க்காரனை கூட பகைவனாகப் பார்ப்பது என எத்தனை முக்கியமான வேலைகள். 

இப்படியான நிகழ்வுகளைப் பார்க்கும் போது, என் இனம் அழிவின் பாதையில் பயணிக்கிறதா?என்று நினைக்கத் தோன்றுகிறது.  இன்று தாயாய், தகப்பனாய், தாத்தா பாட்டியாய் உள்ளோரெல்லாம், நாளைய சமுதாயத்திற்கு மிச்சம் வைத்துவிட்டு போகப்போவது என்ன? அடிமைகள் என்ற பட்டமா? 

Saturday, June 11, 2011

இன்னும் எத்தனை நாட்கள் இந்த சோகம் ?

ஜெயா டி.வி நிகழ்ச்சியில், இலங்கை சிங்களவ ராணுவ நாய்களால் சுடப்பட்டு உயிர் தப்பிய ஒரு தமிழ் மீனவனின் நேரடி வாக்குமூலம் ஒளிபரப்பாகியுள்ளது. இந்நிகழ்ச்சியைப் பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். விடியோவைப் பார்க்க கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யுங்கள். 

Sunday, May 15, 2011

வாழ்த்துவோம்!

நடந்து முடிந்த தமிழக  சட்டசபைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியைப் பெற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களை வாழ்த்தும் நெஞ்சங்களுள் நாமும் ஒருவராக இருப்போம். எத்தனையோ அரசுகள் தமிழகத்தில் அமைந்தும் , ஒன்றுபடாத மீனவர் சமுதாயம் சாதித்தது என்னவோ, ஒன்றுமேயில்லை. என் அருமை மீனவ சமுதாயமே, உங்களின் குறைந்தபட்ச ஒற்றுமைக்கும், வாழ்வாதாரத்திற்கும் அதிர்வேட்டு வைக்கும் நிகழ்வுகள் தமிழக கடற்கரை முழுதும் மின்சாரம் தயாரிக்கும் ஆலைகளின் வடிவில் உருவெடுத்துள்ளன என்பது நீவிர் அறியாததா? பறந்து கிடந்த கடலுக்குள்ளே, சுதந்திரமாய் சுற்றித் திரிந்து, இறைவன் கொடுத்த வளத்தை வாழ்வாகக் கொண்ட உங்களை எல்லைகளைச்  சொல்லி மத்திய அரசு முடக்கும் முயற்சிகள் ஒரு பக்கம். கருப்பு பணத்தையும், வெளுப்பு பணத்தையும் கொட்டி உங்கள் வாழுமிடங்களை காலிச் செய்ய நடக்கும் முயற்சிகள் ஒரு புறம். சொந்த நாட்டுக்குள்ளே, அகதிகளாய் வாழத் தயார் ஆகிவிட்டீர்கள், அப்படித்தானே? 

செய்யும் தொழிலை தெய்வமாய் மதிக்க வேண்டும் என்பார்கள். என் சமுதாயம் மதித்து வாழ்கிறதா? அப்படிஎன்றால், வெளிநாட்டு வருமானம் பெரிதென்று கருதி நிறைய இளைஞர்கள் வெளிநாடுகளில் இருக்கின்றனர். நாகரிகத்தின் வளர்ச்சி என்று சொல்லி பல  குடும்பங்கள் மேற்கில் குடியேறிவிட்டனர். கல்வி,வேலைவாய்ப்பு என்று சொல்லி பலர் வெளியேறிவிட்டனர். ஆனால், மீன் பிடித்து வாழும் என் ஏழை மீனவர்களின் எதிர்காலம், கேள்விக்குறிதானா? 

மீனவனின் வாழ்வில் பஞ்சாயத்து என்பது ஒரு மிகப் பெரிய அங்கம். ஆனால், எத்தனை மீனவ பஞ்சாயத்து புள்ளிகள் யோக்கியமானவர்களாக இருக்கிறார்கள் என்பதை அவரவர் மனசாட்சியைக் கேட்டு அவர்களே தெரிந்துகொள்ளவேண்டும். காரணம், பிச்சைக் காசுகளுக்காக தங்களை நம்பும் சமுதாயத்தை காட்டிக்கொடுத்து வாழும் அவலத்தை நிறைய பேர் அரங்கேற்றம் செய்கிறார்கள் என்பதால் தான் இதைச் சொல்ல வேண்டிய நிலை. ஒற்றுமை என்கிறபோது, நம் மீனவ இனத்தின் கட்டுக்கோப்புத்தான் அதிகம் பேசப்படும். ஆனால், தன் பிள்ளைகள் படிக்க வேண்டும், தன் பிள்ளைகள் மட்டும் நல்வாழ்வை அனுபவிக்க வேண்டும், தன் குடும்பம் மட்டும் சுகமாய் வாழவேண்டும் என்பதில் அதிக அக்கறையுடன் வாழும் பட்சத்தில், தங்களின் வாழ்க்கை வரலாற்றில் அதிக கறைகள் படிகின்றன என்பதை மறந்துவிடக்கூடாது. 

இம்மாதிரி எட்டப்பர்களுக்கு காத்திருக்கிறது கடவுள் தரப்போகும் மரணதண்டனை. எத்தனையோ அரசியல்வாதிகள், அதிகாரம் படைத்தோர், கோடிசுவரர்கள் எல்லாம் தர்மத்தைக் கைவிட்டதனால் எமதர்மனின் கால்களில் விழுந்தார்கள் என்பதையெல்லாம் யாரும் அறியாதது அல்ல. அவர்களின் குடும்பங்கள் சின்னாபின்னப் பட்டதெல்லாம் வரலாறு நமக்கு சொல்லும் பாடமாக இருக்கின்றது. எனவே, நியாயம் எதுவோ அதன் வழியில் வாழப்பாருங்கள். ஒற்றுமையாய் வாழ்ந்து உங்களின் சுதந்திரத்தையும், வாழ்வாதாரத்தையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள். கொள்ளைக்காரர்களின் பிடியில் சிக்கி சொந்த நாட்டில் அகதிகளாய் வாழ ஆசைப்படாதீர்கள்.